திருமணமாகாத நபருக்கு விரைவீக்கம் அறுவை சிகிச்சைக்கு பதிலாக, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் ஜகாரியா கிராமத்தில் விரைவீக்கம் காரணமாக அவதிப்பட்ட வந்த மன்கா யாதவ் என்பவர் அறுவை சிகிச்சைக்காக செயின்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மன்கா யாதவை சந்தித்த மருத்துவர்கள் உங்களுக்கு வெற்றிக்கரமாக குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது என்று தெரிவித்தனர். இதனைத் தேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு பதிலாக குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது.
திருமணமாகாத தனது மகனுக்கு எப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மன்கா யாதவின் தந்தை ஆத்திரமடைந்த நிலையில், மன்கா யாதவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் குடும்ப கட்டுபாட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் என படிவத்தில் கையெழுத்திட்டார் என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மன்கா யாதவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று உள்ளது என்றும் அவரின் இரண்டு மனைவிகளும் தற்போது பிரிந்து சென்றுவிட்டனர் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in