சோகத்தில் ‘லியோ’ படக்குழுவினர்! ஏன் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்.

லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கெளதம் மேனன் என ஒரு திரைப்பட்டாளமே உள்ளது. படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மஜோன் பரமஹம்சா கேமரா மேன். இவரது தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் படக்குழுவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதன் காரணமாக படப்பிடிப்பு சிறிது நாட்கள் ஒத்தி வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனோஜ் பரமஹம்சா பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் 2009ஆம் ஆண்டு ஈரம் படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் கவனம் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கு இடம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.