பிரபல தெலுங்கு நடிகரும், என்.டி.ஆரின் பேரனுமான நந்தமுரி தாரக ரத்னா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
இவர் கடந்த2002ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ‘பதாத்ரி ராமுடு’,’அமராவதி’, ‘நந்தீஸ்வரது’, ‘மனமந்தா’ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ‘அமராவதி’ படத்திற்காக ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றவர் இவர்.
முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்த தாரக ரத்னா, செய்து தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். ஜனவரி 27ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மகன் நரலோகேஷி நடத்திய பாதயாத்திரையில் நந்தமுரி தாரக ரத்னா பங்கேற்றார்.
அப்போது திடீரென அவர் கீழே விழுந்தார். அவரை அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு நாராயண ஹருதயாலயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
23 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நந்தமுரி தாரக ரத்னா, நேற்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு தெலுங்கு சினிமா உலகிலும், அரசியல் வட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in