சமூக வலைதளங்களில் பிரபலமான காதல் ஜோடியில், இளைஞர் இரத்த வாந்தி எடுத்த உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கண்ணிக்கரா பகுதியை சேர்ந்த பிரணவ் என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து சிக்கினார். அதில் அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
எழுந்து நடக்கமுடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதையடுத்து போக்குவரத்து விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அவருக்கு முகநூல் வாயிலாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹானா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.
பின்னர் காதலாக மாறியதை அடுத்து பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2020ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
பின்னர் இருவரும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். மாற்றுத்திறனாளியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் சஹானாவுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பிரணாவுக்கு திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது. அவர் வீல் சேரில் இருந்தவாறே ரத்த வாந்தி எடுத்ததால், பதறிப்போன குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரணவ் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரணாவ் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in