
லென்ல் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞருக்கு கண்ணின் கருவிழி காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும்போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அது பெரும் ஆபத்தில் கொண்டு சென்று நிறுத்திவிடும். அப்படி ஒரு நிலைதான் அமெரிக்காவை சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மைக் க்ரும்ஹோல்ஸ் (21) என்ற இளைஞர் கல்லூரி காலம் முலம் கண்ணாடிக்கு பதில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் தூங்குவதற்கு முன்பு அதனை கழற்றி வைக்கும் பழக்கம் அவரிடம் இல்லை.

மறந்து அப்படியே தூங்கி எழுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தொடர்ந்து இப்படியே இருந்ததால் அவர் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. ஒருநாள் இரவு கண் எரிச்சல் ஏற்பட்டதை அடுத்து, அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தூங்கியுள்ளார்.
ஆனால், மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அவரது வலது கண்ணில் பார்வை தெரியவில்லை. கண்ணாடியை பார்த்தபோது, அந்த கண்ணில் கருவிழி காணாமல் போய் வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்துள்ளது.

பதற்றமடைந்த மைக், உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கருவிழியை, கான்டாக்ட் லென் அணிந்த படியே தூங்கியதால் அரிய வகை ஒட்டுண்ணி அரித்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தன்னை போல் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு தூங்க கூடாது, குளிக்கக் கூடாது என்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
newstm.in