
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாரிசு’. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப பின்னணியில் உருவாகி வெற்றிப் பெற்றுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், எமோஷனல், காதல் ஆகியவை இடம்பெற்றது.
இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தமன் இசையில் உருவான ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இப்படம் விரைவில் ஒடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது அதே போல் சற்று முன் ப்ரைம் வீடியோவில் வெளியானது..
