சோகம்..!! பழம்பெரும் கன்னட இயக்குநர் எஸ்.கே.பகவான் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

1966-ல் வெளியான ‘சந்தியா ராகம்’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.கே.பகவான்.இதனை தொடர்ந்து ஏ.சி. நரசிம்ம மூர்த்தியுடன் இணைந்து ராஜதுர்கதா ரகசிய படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்தார். பின்னர் துரை ராஜ் – பகவான் இருவரும் இணைந்து படங்களை இயக்க தொடங்கினர். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் திரைப்படங்களை இயக்கிய முதல் கன்னட இயக்குநர்கள் ஆவார்.

இருவரும் பின்னர், கஸ்தூரி நிவாசா, ஈரடு கனவு, பயலுதாரி, காற்றுமாது, சந்தனாட கோம்பே, ஹோசா பெலகு, பென்கிய பலே, ஜீவன சைத்ரா போன்ற பல படங்களையும், ஆபரேஷன் ஜாக்பாட், நல்லி சிஐடி 999 போன்ற ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களையும் இயக்கி உள்ளனர்.

துரை ராஜ் காலமான பிறகு, பகவான் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்தார். 1996-ம் ஆண்டு வெளியான பாலொண்டு சதுரங்கா என்ற படம், துரை ராஜ் – பகவான் இருவரும் இணைந்து இயக்கிய கடைசிப் படம் ஆகும். 2019-ம் ஆண்டில், அவர் தனது 85 வயதில் தனது 50-வது படமான ‘அட்வா கோம்பேவை’ இயக்கினார்.

இந்நிலையில் கே.எஸ் பகவான் வயது மூப்பு காரணமாக நேற்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், “கன்னடத் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்ரீ எஸ்.கே. பகவானின் மறைவு செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை அளிக்க பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.