பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ஐபிஎஸ்!!

கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு, பெண் ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் அறநிலையத்துறை ஆணையராக உள்ள ரோகிணி சிந்தூரி மீது ரூபா ஐபிஎஸ் சரமாரியாக புகார்களை முன்வைத்துள்ளார். ரோகிணி சிந்தூரி மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மகேஷுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தாகவும், ஆனால் தற்போது மகேஷுடன் ரோகிணி சமாதானம் பேசுவதாக ரூபா கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பின் போது ரோகிணி வசித்த வந்த அரசு குடியிருப்பில் சொகுசு நீச்சல் குளம் கட்டியதாகவும், ரூபா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஐஏஎஸ் அதிகாரி ரவி இறப்புக்கும் ரோகிணிக்கும் தொடர்பு உள்ளதா என்றும் சந்தேகமும் எழுப்பியுள்ளார்.

கிட்டத்தட்ட 20 புகார்களை ரோகிணி மீது ரூபா அடுக்கியுள்ளார். ஆனால் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரோகிணி, தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைத்த புகைப்படங்களை ரூபா எடுத்துள்ளதாகவும், ரூபாவுக்கு மனநிலைசார்ந்த பிரச்னை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ரூபா ஐபிஎஸ். இவர் தற்போது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

இரண்டு பெண் அதிகாரிகளுக்கு இடையே வெடித்துள்ள மோதல் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.