
மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமைதான் என ஆளுநர் ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என்றும், தற்போது அது புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆப்ரகாம் லிங்கனை ஜனநாயகத்தின் உதாரணமாக காட்டுவது சார்லஸ் டார்வினை பரிமாண வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையினை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டர் மூலம் ஆளுநர் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களே ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது, புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் என பதிவிட்டுள்ளார்.
newstm.in