நீண்ட இழுபறிக்கு பிறகு நடைபெற்ற டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெல்லி மாநகாரட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் பெற்றன.
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநாகாரட்சி பாஜக வசம் இருந்த நிலையில், அதை ஆம் ஆத்மி தட்டிப்பறித்தது. இந்நிலையில் மேயர் தேர்தலில் எப்படியாது வெற்றிபெற வேண்டும் என பாஜக முயற்சி செய்து வந்தது. கடந்த ஜனவரி 6, 24 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் மேயர் தேர்தல் நடைபெற இருந்தது.

ஆனால் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் மூன்று முறை தேர்தல் ரத்தானது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று நடைபெற்ற தேர்தலில் அதில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தேர்தலில் மொத்தம் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓப்ராய்க்கு 150 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியின் மேயராக தேர்வானார்.
newstm.in