பக்கத்து வீட்டு மாடியில் இருந்து நடிகை ஆலியா பட்டை புகைப்படம் எடுத்து வெளியிட்ட நபர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
நடிகை ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளதால், ஆலியா நடிப்புக்கு தற்காலிகமாக இடைவெளி எடுத்துள்ளார். அவர் வீட்டில் இருந்து குழந்தையை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஆலியா, வீட்டில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தபோது, பக்கத்து வீட்டு மாடியில் இருந்து சிலர் அவரை போட்டோ எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஆலியா பட், அந்த நபர்களை சரமாரியாக சாடி உள்ளார். வீட்டில் லிவ்விங் ரூமில் அமர்ந்திருந்தபோது, யாரோ என்னை பார்ப்பது போல் தோன்றியது. அப்போது எதிர்வீட்டு மாடியில் இருவர் என்னை படம்பிடித்து கொண்டிருந்தனர்.
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்று கூறியுள்ள ஆலியா பட், படம் பிடித்த நபர்களை கடுமையாக சாடி மும்பை போலீசையும் டேக் செய்திருந்தார். ஆலியா பட்டின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு ஆதரவாக ஏராளமான பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நடிகர் அர்ஜுன் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மா உள்பட ஏராளமானோர் இதுபோன்ற செயல்களை கண்டித்தும், ஆலியா பட்டிற்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in