
துருக்கி, சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை யாராலும் மறக்க முடியாது. 50 ஆயிரம் பேரை பலி வாங்கிய கொடூரம். அதை தொடர்ந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனிடையே உத்தராகண்டில் எந்த நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, சற்றுமுன் சென்னையில் காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.