வீட்டிலேயே தனியாக சிறை அமைத்து அமைச்சர் ஒருவர் பெண் மற்றும் மகன்களை சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியில் பலுசிஸ்தானின் கட்டுமானம் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக அப்துல் ரகுமான் கேத்ரான் பதவி வகித்து வருகிறார்.
இவரது வீடு பர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்தன.

விசாரணையில், இறந்த பெண்ணின் குடும்பத்தையே கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டில் உள்ள சிறையில் அடைத்ததாக, பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்களின் 13 வயது மகள் உள்பட மற்ற 5 குழுந்தைகளும் இன்னும் அமைச்சரின் வீட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட சிறப்பு விசாரணை குழுவினர் அமைச்சர் அப்துல் ரகுமான் கேத்ரானை கைது செய்தனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததை அடுத்து 13 வயது சிறுமி மற்றும் 5 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிகழ்விடத்திற்கு வரும் வரை பெண் மற்றும் அவரது 2 மகன்கள் உடல்களை புதைக்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in