இனி 6 வயது நிரம்பிய பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்கை..!!

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது., நாட்டில் பள்ளிகளில் இனி 1 ஆம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும் 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேநேரத்தில் 3 வயதில் குழந்தைகளை ப்ரீ-கேஜி சேர்க்கலாம், 3 ஆண்டுகள் ப்ரீ-கேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும். குழந்தைகளை 6 வயதில் 1 ஆம் வகுப்பு சேர்க்கும்போது குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.