குட் நியூஸ்..!! இனி நொய்டா விமான நிலையத்தில் 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும்..!!

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவையில் யோகி ஆதித்யநாத் அரசு 2023-24 ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (என்ஐஏ) முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட 25 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

தற்பொழுது 2 ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் வரவிருக்கும் 5 சர்வதேச விமான நிலையங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது ஜெவார் மற்றும் அயோத்தியில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வரும் காலங்களில் உத்திரபிரதேசத்தில் 5 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 16 உள்நாட்டு விமான நிலையங்கள் இருக்கும். இது மாநிலத்தில் உள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 21 ஆக உயர்த்தும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.