டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.1.30 லட்சம் வரை..!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு ஆகிய துறையில் காலியாக இருக்கும் 1,083 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வானது மே 27-ம் தேதி நடைபெற இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் : 1083

பணி விவரம்:

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – 794

இளநிலை வரைத்தொழில் அலுவலர் – நெடுஞ்சாலைத் துறை – 236

இளநிலை வரைத்தொழில் அலுவலர் – பொதுப்பணித் துறை – 18

வரைவாளர், நிலை-III – நகர் ஊரமைப்பு துறை – 18

முதலாள், நிலை-II – தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை – 25

கல்வித் தகுதி:

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க சிவில் பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும்.

இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை வரைத்தொழில் அலுவலர் – பொதுப்பணித் துறை வில் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி அல்லது Architectural Assistantship பிரிவில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு.

வரைவாளர் பணிக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற Town and Country Planning படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதலாள், நிலை-II பணிக்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல் பொறியியலில் இளங்கலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:


சம்பள விவரம்:

பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ரூ.35,400-1,30,400/-

இளநிலை வரைத்தொழில் அலுவலர் – நெடுஞ்சாலைத் துறை – ரூ.35,400-1,30,400/-

இளநிலை வரைத்தொழில் அலுவலர் – பொதுப்பணித் துறை -ரூ.35,400-1,30,400/-

வரைவாளர், நிலை-III – நகர் ஊரமைப்பு துறை – ரூ.35,400-1,30,400/-

முதலாள், நிலை-II – தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை – ரூ.19500-71900/-

விண்ணப்பக் கட்டணம்:

நிரந்தரப் பதிவுக்கட்டணம் – ரூ.150

தேர்வுக் கட்டணம் – ரூ.100  

ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150 (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள் :

சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், உதகமண்டலம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03. 2023

இது தொடர்பான முழு விவரத்திற்கு அறிவிப்பின் https://www.tnpsc.gov.in/Document/english/05_2023_CESSE_ENG.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.