மோர்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபர் 30-ஆம் தேதி பாலத்தில் சுமார் 250 பேர் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 பேர் உயிரிழந்தனர்.
இந்த பால விபத்தில் உயிரிழந்த 135 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பால விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோர்பி தொங்கு பாலத்தை பராமரித்த கடிகார தயாரிப்பு நிறுவனமான ஒரேவா குழுமத்துக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சோனியா கோகானி மற்றும் நீதிபதி சந்தீப் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.