
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் எய்டன் மார்கரம் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற எஸ்.ஏ. டி.20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக இருந்தவர் எய்டன் மார்கரம். இவர் தலைமையிலான அணி கோப்பையை வென்றது. ஐ.பி.எல். 2022-ல் 3 அரைச்சதங்களுடன், 381 ரன்களை மார்க்கரம் அடித்திருந்தார்.
நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி அன்று தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.