2023- 24ம் கல்வியாண்டிற்கான 25% இடங்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை ஆன்லைனில் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதில் தேர்வாகி தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்கள் LKG அல்லது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அந்த கட்டணத்தை முழுவதும் தமிழ்நாடு அரசே செலுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கு https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.