
அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg Research) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரே மாதத்தில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளன. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி பவர், அதானி வில்மர், ஏசிசி ஆகிய அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் இன்று வரை சரிவைச் சந்தித்து வருகின்றனர்.
பிப்ரவரி 22-ம் தேதி மட்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 40,000 கோடி ரூபாய் அளவில் சந்தை மதிப்பை இழந்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி, இஸ்ரேல் நாட்டில் உள்ள ஹைஃபா துறைமுகத்தை (Haifa Port) 9,840 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சந்தை மதிப்பில் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் வேளையிலும், வர்த்தக வாய்ப்புகளிலும், விரிவாக்கத்திலும் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.