மேகாலயா தேர்தலில் தனித்து களம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் தேசிய மக்கள் கட்சி பற்றி தனது விமர்சனத்தையும், பாஜக மீதான விமர்சனத்தையும் முன் வைத்தார்.
அவர் கூறுகையில், வெளியில் இருந்து வரும் யாரையும், உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க அனுமதிக்காதீர்கள் என குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை பற்றியும், மேகாலயாவில் நல்ல மருத்துவமனையோ, மருத்துவ கல்லூரியோ இல்லை. ஆனால், ஊழல் மட்டும் இருக்கிறது. இவ்வாறு மேகாலயா தேர்தல் பரப்புரையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.