மின்வாரிய தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெருவிளக்கு, குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துமாறு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் இந்த பணிகளை இன்றைய தேதிக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.