காவல்துறை அதிகாரி ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் ஆசிப் நகர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த விஷால் என்பவர், ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். அவர் வழக்கம்போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சமீபகாலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் பலர் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஜிம்மில்தான் உயிரிழந்தார்.
கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி கீழே விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோன்று தற்போது தெலங்கானாவில் போலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in