கணவர் ஆபாச வீடியோ பார்ப்பதை தடுத்ததால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில சூரத் பகுதியை சேர்ந்த காஜல் (25) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிஷோர் (35) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கிஷோரின் குணம் மாறத்தொடங்கியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் கிஷோர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆபாச படங்களில் வருவது போல் உறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்றும், கிஷோர் ஆபாச படங்கள் பார்க்க, காஜல் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிஷோர், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததை உணர்ந்த கிஷோர், தீயை அணைத்து மனைவியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தனது மனைவி தற்கொலை செய்துகொள்ள முயன்று தீக்குளித்து கொண்டதாக கூறியுள்ளார்.
தகவல் அறிந்த வந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காஜலிடம் வாக்குமூலம் பெறும் போது அவர், தனது கணவர் எரித்ததை கூறிவிட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி காஜல் உயிரிழந்தார். கிஷோர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
newstm.in