
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வரும் திங்கட்கிழமை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ந் தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.