மகளிர் டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், அடுத்த இறுதி போட்டியாளர் யார் என்பதற்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்கள் குவித்தார். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, வெற்றி பெற இறுதி வரை போராடியது. ஆனால், 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணி தோல்வியை தழுவியது.
தென் ஆப்ரிக்கா சார்பில் அயபோங்கா 4 விக்கெட்களும், ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்களும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, முதல் முறையாக டி20 உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு, இறுதி போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in