உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 1100 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் என்பது இங்கு வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்படுவது இல்லை. சேமிப்பாகவும் இருக்கிறது. அதனால் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் நகை வாங்குவது இந்தியர்களின் வாடிக்கை. தொடர் உயர்வில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்பட்டது.
நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,880 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 1 கிலோ வெள்ளி 70,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,210 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை குறைந்து 41,680 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா குறைந்து 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.