மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் பர்ஷி தாலுகாவில் வசித்து வருபவர் விவசாயி ராஜேந்திர சவான் (63). இந்தச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நான் சோலாப்பூரில் உள்ள வெங்காய வியாபாரி ஒருவருக்கு ஐந்து குவிண்டால்களுக்கு மேல் எடையுள்ள 10 மூட்டை வெங்காயத்தை விற்பனைக்கு அனுப்பி இருந்தேன். ஆனால் சரக்கை ஏற்றுதல், போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் பிறவற்றிற்கான கட்டணங்களைக் கழித்தது போக வெறும் 2 ரூபாய் 49 காசுகளை மட்டுமே நிகர லாபமாக கிடைத்ததாக தெரிவித்தார்.
வெங்காயத்தை கொள்முதல் செய்த வியாபாரி எனக்கு வழங்கிய விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய். வெங்காயத்தின் மொத்த எடை 512 கிலோ என்றும், விளைபொருளுக்கு கிடைத்த மொத்த விலை ரூ.512 என்றும் அவர் கூறினார். வேலை, எடை, போக்குவரத்து மற்றும் இதரவற்றிகு செலவு செய்த தொகையான 509 ரூபாய் 51 காசுகளை கழித்த பிறகு எனக்கு நிகர லாபமாக 2 ரூபாய் 49 காசுகள் கிடைத்தது.
எனக்கு நடந்த இந்த சம்பவம் எனக்கு மட்டுமின்றி மாநிலம் முழுவதுமுள்ள மற்ற வெங்காய விவசாயிகளுக்கும் அவமானமாக கருதுவதாக கூறிய அவர். இதுபோன்ற வருமானம் கிடைத்தால், நாங்கள் எப்படி வாழ்வோம்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
வெங்காயம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும் என்றும் அரசுகளுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், விவசாயி சவான் கொண்டு வந்த வெங்காயம் தரம் குறைந்தது என தெரிவித்துள்ளர். விவசாயி 10 மூட்டைகளை மட்டுமே கொண்டு வந்ததால் அவருக்கு குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கிடைத்தாகவும், இதே விவசாயி கடந்த காலங்களில் 400க்கும் மேற்பட்ட மூட்டைகளை என்னிடம் விற்று நல்ல வருமானம் பெற்றுள்ளார் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஜவானுக்கு வழங்கப்பட்ட செக்கின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.