வரும் 6-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் செல்கிறார்.இரவு கன்னியாகுமரியில் தங்கும் முதல்வர் மறுநாள் 7-ம் தேதி காலையில் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்டரை அடி உயர முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ழுழு உருவ வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார். முதல்வர் மு.க .ஸ்டாலினின் வருகையை அடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 26-ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் தலைமையில் நடக்கிறது.