
மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா, இன்று ( மார்ச் 2) காலை 10.30 மணிக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகும் என ட்வீட் செய்துள்ளது. லைகாவின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. அதனால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அல்லது ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.அதேபோல், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
முக்கியமாக அஜித்தின் ஏகே 62 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ஏகே 62 அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி தற்போது ஏகே 62 அப்டேட் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் ஏகே 62 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.