ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலவரம் : நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாக்கு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி முன்னிலையில், ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரப்படுகின்றன.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாளர்கள், அரசியல் கட்சி முகவர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் உள்ளே அனுமதித்தனர். வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேசைகள் அமைக்கப்பட்டு மற்றும் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. முதலில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.. தபால் வாக்குகள் எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் வேட்பாளர் -132,  அதிமுக வேட்பாளர் தென்னரசு – 58, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் – 01, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் – 0 வாக்குகள் பெற்றுள்ளனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.