இந்தியாவில் இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் பல மாநிலங்களில் இந்த ஓய்வூதிய முறை பின்பற்றப்படும். இப்போது கூட சில மாநிலங்கள் மீண்டும் புதிய ஓய்வூதிய முறையில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப முயன்று வருகின்றனர்.
மத்திய அரசு பழைய ஓய்வூதிய முறை நிதிநிலையை ஆபத்தில் தள்ளும் என எச்சரித்து வருகிறது. பிரதமர் மோடியும் அண்டை நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டங்களைக் கொண்டு வந்தால் நம் குழந்தைகளின் எதிர்காலமே முற்றிலுமாக பாழாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பல தொழிலாளர் அமைப்பு பழைய ஓய்வூதிய முறையே வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய ஓய்வூதிய முறை 2004ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும். இதனிடையே டிசம்பர் 22, 2003க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்ல ஒரு வாய்ப்பை தர அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்பலாம்.
டிசம்பர் 22, 2003க்கு முன் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதிய முறை நடைமுறைக்கு வந்த ஜனவரி 1, 2004ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களும் இப்போது புதிய ஓய்வூதிய முறையில் தான் உள்ளனர். அவர்களுக்குத் தான் இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய முறைக்குத் திரும்ப ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஆட்சேர்ப்பு செயல்முறை தாமதமாகி 2004இல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுதப்படை (CAPF) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசு ஊழியர் வாழ்நாள் முழுக்க தேவையான வருமானத்தைப் பெறுவார்கள்.. பொதுவாகக் கடைசியாகப் பெறப்பட்ட சம்பளத்தில் 50%க்காக இது இருக்கும் ஓய்வூதியத்துக்கான செலவை அரசே ஏற்கும். இந்த முறையை வாஜ்பாய் அரசு 2003இல் நீக்கிவிட்டு, புதிய ஓய்வூதிய முறையைக் கொண்டு வந்தது.