
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு தன்னிச்சையாக நியமிக்க முடியாது. பிரதமர், எதிர் கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தான் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு தனிஅமைப்பு தேவை. இது குறித்து பொது நலன்கள் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடுத்தனர் .
இந்த வழக்கை K.M. ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்த நிலையில் , தலைமை தேர்தல் அதிகாரியின் பதவிக் காலம் இரன்டு ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை கடந்த முறை தலைமைத் தேர்தல் ஆணையர் ஆறு ஆண்டுகள் நீடித்தது குறிப்படத்தக்கது. அவர்களுக்கு குறுகிய கால பதவி மட்டுமே வழங்கப்படுகிறது என வழக்கில் குறிப்பிட்டிருந்தது .மேலும் 18 ஆண்டுகளில் 14 தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் வழக்கை விசாரித்த பென்ச் தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சிபிஐ இயக்குநர் தேர்வு போலவே தேர்தல் ஆணையர் தேர்வும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.