தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பல வெளி மாநிலத்தவர்கள் நம்மை நம்பி பணிக்கு தமிழகம் வந்துள்ளனர். தமிழர்களும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிகின்றனர். அதனால் தவறான வதந்திகளை பரப்பக் கூடாது.நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்கள் பிரச்சனைக்கு வழிவகுக்க கூடாது. சமூக வலைதளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.