வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோபி, சுதாகர் மற்றும் அவர்களது குழுவினர் பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மூலம் நகைச்சுவையான பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இவர்கள் அண்மையில் வெளியிட்ட வடமாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோ தற்போது அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது.

அதனால் வடமாநில தொழிலாளர்கள் இங்கு தேவை என்பது கவனம் பெற்றுள்ளது. ஆனால் பரிதாபங்கள் வீடியோவில் அவர்களை விமர்சிக்கும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதாகவும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கின்றனர் என்றும் பேசியிருந்தனர்.

ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை கக்குவது தவறானது என்றும், இதனால், யூடியூபர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அவர்களது யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை பாஜகவினரும் முன்வைத்து வருகின்றனர்.
newstm.in