தமிழில் ‘அன்பு’ (2003) படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலா. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரரான இவர் ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா அப்பா செல்லம்’, ‘கலிங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘புதிய முகம்’, ‘சாகர் அலையஸ் ஜாக்கி ரீலோடட்’, ‘என்னு நிண்டே மொய்தீன்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிவா இயக்கிய ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.’வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது