கோவை கார் வெடிப்பில் வெளியான புதிய தகவல்!!

கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் நிகழ்ந்த கார் வெடிப்பி ஜமீஷா மொபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதை தொடர்ந்து என்ஐஏ விசாரணை நடைபெற்றது.

அதில், ஜமீஷா மோபின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பிப்ரவரி 2022இல் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சதித்திட்டக் கூட்டங்கள் நடத்தியதும் தெரியவந்தது.

உமர் பாரூக், முபீன், முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் இணைந்து பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதே போல் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்ற அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். இரண்டு சம்பவங்களுக்கும், எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், குரோசான் மாகாண ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாத அமைப்பின் ‘வாய்ஸ் ஆப் குரோசான்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.