தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு.பழனியப்பன். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிக ஆர்வம் தமிழ் இதனால் இவர் பல பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். பின் 1994 ஆம் ஆண்டில் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். அதற்கு பின் இரண்டு வேறு இயக்குனர்களிடம் என்னை இயக்குனராக பணிபுரிந்தார். பின் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழிலிடமும் பழனியப்பன் பணிபுரிந்தார்.
பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இவர் முதன் முதலாக இயக்குனரானார். கரு.பழனியப்பன். இந்தப் படம் இயக்குநராக நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்றார்.
அதன் பிறகு அவர் இயக்கிய சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மந்திர புன்னகை என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, கள்ளன், டி பிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் ஜீ தமிழில் இருக்கிறார். கொண்டிருக்கும் பிரபலமான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கரு.பழனியப்பன் அறிவித்துள்ளார்.அவரது பதிவில்,
எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட ” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.
சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் ! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.