வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு நற்செய்தி. மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ள புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது , ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அட்டை போன்றவை வைத்திருப்போம் .
அவற்றில் முகவரி மாறி இருக்க வாய்ப்புகள் அதிகம். அப்போது குழப்பம் ஏற்படும். இதற்காக அனைத்து கார்டுகளிலும் திருத்தம் செய்வது இயலாது. அப்படியே மாற்றம் வேண்டும் எனில் துறை ரீதியாக அலைய வேண்டிய சூழல் உண்டாகும். இதனை தவிர்க்க, ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்தால் தானாகவே மற்ற அடையாள அட்டைகளில் மாற்றம் ஆகிவிடும்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப தகவல் அமைச்சகம் இணைந்து இந்த புதிய ஏற்பாட்டை செய்து வருகிறது.
தகவல் தொழிநுட்பம், போக்குவரத்து ஊரக மேம்பாடு, இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து செயல்படும் என தெரிகிறது. முதலில் IT துறை ஆலோசித்து முடிவெடுக்கும். பின்னர் பாஸ்போர்ட் உள்ளிட்ட மற்ற சேவைகள் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.