பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
உலக அளவில் அதிக மக்களால் வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்பட்டு வரும், அந்நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
தனிப்பட்ட வேலைகளுக்கும் அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் வாட்ஸ் ஆப் சிறந்த செயலியாக உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்ததுள்ளது. வழக்கமாக வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம்.
வீடியோக்கள் அதிகபட்சமாக 30 வினாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்க முடியும். இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதே போல இனி வாய்ஸ் நோட்களையும் 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அம்சம் தற்போது பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டும் என்பதையும் பயனர்கள் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
newstm.in