மந்தைவெளிபாக்கத்தில் உள்ள சாலைக்கு டி.ம்.எஸ் பெயர்

இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் எவரும் இலர். இதயம் தொட்ட பாடல்களை பாடி இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பின்னணி பாடகர்களில் ஒருவர் தான் டிஎம்எஸ் என்று அன்பாக அழைக்கப்படும் டி.எம்.சௌந்தராஜன்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். இவர் முன்னணி கதாநாயர்களான சிவாஜி எம்ஜிஆர் இவர்களுக்கு நிறைய பாடல்கள் பாடியுள்ளார். இவர் குரல் இரு கதாநாயகர்களுக்கும் மிகப் பொருந்தும். அவரவர் குரலுக்கு ஏற்றார் போல் பாடுவதில் வல்லவர்.

“அச்சம் என்பது மடமையடா” என்ற பாடல் கேட்டால் பிறந்த குழந்தை கூட வாள் எடுக்கும். வீரம் மட்டுமல்ல சமூக சிந்தனையான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எம்ஜிஆர் படங்களில் இவர் பாடியிருப்பது தனிச் சிறப்பு. வீரமான,சோகமான மகிழ்ச்சியான பாடல்களை பாடி அசத்துவார்.

இவரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த சென்னை மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட சாலைக்கு டிஎம். சவுந்திரராஜன்என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்த இல்லம் அமைந்த மந்தைவெளியில் உள்ள சாலைக்கு “டி.எம். சௌந்தரராஜன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 24) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.