ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!!

கேரளாவில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

கொச்சி அருகே நெடும்பசாரி விமானநிலையத்தில் கடற்படைக்குச் சொந்தமான ஏ.எல்.ஹெச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டரை சோதனை செய்யும் பணி நடைபெற்று வந்தது.

ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமான நிலையத்தில் விபத்து நடைபெற்ற தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.