தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரலாகும் வீடியோ..!!

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மற்ற வீடியொக்களை விட மிக வித்தியாசமான உள்ளது. இதில் மணமகனும் மணமகளும் வாழைப்பழத்தை ஊட்டி விடுவது குறித்து இருவருக்கும் சண்டை மூள்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே திருமண மேடை சண்டைத் தளமாக மாறி விடுகின்றது. 

 மணமகன் வாழைப்பழத்தை எடுத்து மணமகளுக்கு ஊட்டத் தொடங்குகிறார். ஆனால் மணமகள் அதை வாங்கிக்கொள்ள மறுக்கிறார். ஆனால் மணமகன் கட்டாயப்படுத்டு அவருக்கு வாழைப்பழத்தை ஊட்டத்தொடங்குகிறார். இதனால் இருவருக்கும் சண்டை தொடங்குகிறது.

கோவமடைந்த மணமகள் மணமகனை அடிக்கத் தொடங்குகிறார். இதனால் மணமகன் அதிக கோபம் அடைகிறார். அவரும் மணமகளை அடிக்கிறார். இதற்கு மணமகளும் பதிலடி கொடுக்க, மணமகன் மேடயை விட்டு இறங்கிவிடுகிறார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.