
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எப்போதும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.
இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு படத்தில் இருந்து “அக நக” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதது. இந்நிலையில் இன்று மாலை படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மிர பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.
newstm.in