Vijay: அன்று ரஜினிக்கு நடந்த அதே அதிசயம் இன்று விஜய்க்கு நடக்குது: தளபதினா சும்மாவா!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Thalapathy Vijay: அன்று ரஜினிகாந்துக்கு நடந்த அதிசயம் இன்று தளபதி விஜய்க்கு நடந்து கொண்டிருக்கிறது.

​விஜய்​வந்துட்டார், தளபதி இன்ஸ்டாவுக்கு வந்துட்டார்கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ட்விட்டரில் கணக்கு உண்டு. இந்நிலையில் தான் அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கப் போகிறார் என தகவல் வெளியானது. இதையடுத்து ஏப்ரல் 2ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தன்னுடைய க்யூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நண்பா, நண்பீஸுக்கு தன் வரவை அறிவித்தார்.
​வரவேற்பு​விஜய்யின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் ஹார்டினாக தட்டிவிட்டு வாங்க தளபதி சார் என வரவேற்றார்கள். விஜய் இதுவரை ஒரேயொரு போஸ்ட் தான் போட்டிருக்கிறார். அந்த போஸ்ட்டுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்திருக்கிறது. இதை பற்றி தான் தளபதி ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.

தளபதி இன்ஸ்டா View this post on Instagram A post shared by Vijay (@actorvijay)
​ரஜினி​சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் கணக்கு துவங்கிய நாளை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அவர் ட்விட்டருக்கு வந்த வேகத்தில் தலைவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவரின் ஃபாலோயர்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்து தேசிய ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளியிட்டன. ரசிகர்கள் அது பற்றி வியந்து பேசினார்கள். அந்த அதிசயம் விஜய்க்கும் நடந்திருக்கிறது.

​Rajinikanth: அம்பானி விழாவில் செம ஸ்டைலா, ஃபிட்டா இருந்த ரஜினி: தலைவருக்கு சுத்திப் போடுங்க

​அதிசயம்​விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்த வேகத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. அது இன்னும் நிற்கவில்லை. விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்து இன்னும் 24 மணிநேரம் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3.9 மில்லியனாக உள்ளது. இந்ந எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

​லியோ​கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னை மற்றும் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தினார்கள். இதையடுத்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்து வருகிறார் த்ரிஷா. 14 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

​எல்.சி.யூ.​லியோ படத்தின் கதை லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ. என்று கூறப்படுகிறது. அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் எல்.சி.யூ.வை சேர்ந்த ஃபஹத் ஃபாசிலும் இருக்கிறார். விஜய் ஏகப்பட்ட வில்லன்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. லியோவில் விஜய்யின் மகளாக நடிக்கிறாராம் பிக் பாஸ் 6 புகழ் ஜனனி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.