71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.
10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து இந்த திட்டத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அப்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ‘ரோஜ்கார்’ என்று அழைக்கப்படுகிற இந்த திட்டம், இளைய தலைமுறையினரிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இந்நிலையில் நாளை 71 ஆயிரம் பிரதமர் பணி ஆணை வழங்க உள்ளார்.
காணொலி வழியாக நடைபெறுகிற நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு பணி நியமன ஆணையை பெற உள்ளனர்.
ரயில் மேலாளர், ரயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க் போன்ற இடங்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
அதே போல், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 71 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
newstm.in