உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மது குடிக்கும் பழக்கம் அண்மைக் காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. அதிலும், பெருநகரங்களில் பாலின வேறுபாடு இன்றி மது அருந்தும் பழக்கம் உள்ளது. கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு பெண்கள் மது அருந்துவது அதிகரித்ததாக ஏற்கனவே ஆய்வின் மூலம் தெரியவந்தது.
கோவிட் காலத்திற்குப் பின் டெல்லியில் வசிக்கும் 37.6 சதவீதம் பெண்கள் தங்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்ததாக தெரிவித்தனர். அதில் கிட்டத்தட்ட பாதியளவு பெண்கள் மன அழுத்தம் காரணமாகவே மது பழக்கம் அதிகரித்துள்ளதாக கூறினர்.
மது அதிகளவில் கிடைப்பதால் மது குடிப்பது அதிகரித்துள்ளதாக ஒருசில பெண்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தேசிய குடும்பநலன் ஆய்வகம் ஒரு தரவை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண்கள் மது அருந்தும் அளவும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் மது அருந்தும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
newstm.in