தமிழகத்தில் 7 நாட்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசு அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் எதிர்வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 12ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.