
கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தந்தை மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ரஹ்மத் அலி என்பவருக்கு தாஹிரா பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
அந்த பெண் ரஹ்மத் அலியின் உறவுக்காரப் பெண். கடந்த மூன்று ஆண்டுகளாக உறவு நீடித்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அந்த பெண்ணோ மனைவியும் குழந்தையும் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.

எனவே மனைவி மற்றும் மகனை கொலை செய்ய ரஹ்மத் முடிவு செய்தார். முதலில் குழந்தையை கொல்ல திட்டம் தீட்டி, 2 வயது மகனை வெளியே கூட்டி சென்றார். பின்னர் நதியில் மூழ்கடித்து கொலை செய்தார்.
குழந்தையின் சடலத்தை பிளாட்டிக் பையில் போட்டு நதியில் வீசினார். குழந்தை காணாமல் போனது தெரியவந்ததால், மனைவி தஹீராவுக்கு கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் ரஹ்மத் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in