அட்சய திருதியை நாளில் தான் திருமால் மகாலட்சுமிக்கு தம் மார்பில் நித்திய வாசம் செய்ய இடமளித்தார். செல்வத்தின் அதிபதிகளான ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என அஷ்ட லட்சுமிகளும் தோன்றிய தினம் ஓர் அட்சய திருதியை தினம். அதனால் இந்த நாளில் பொன், பொருள் வாங்கினால் அது மேலும் மேலும் வளர்ந்து செழிக்கும் என்பது ஐதீகம்.
இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. தங்கம் மட்டுமல்லாமல் வேறு எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.
அட்சய திருதியை பண்டிகை நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே அட்சய திருதியை அன்று மக்கள் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குவது வழக்கம். இதனால் நகைக் கடைகளில் வியாபாரம் களைகட்டும்.அட்சய திருதியை நாளில் மக்கள் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கினாலும் கூட, வேறு சில பொருட்களையும் அட்சய திருதியை அன்று வாங்கலாம்.
லக்ஷ்மிக்கு பிடித்த பொருள் சிப்பி என்பது நம்பிக்கை. ஆகவே, அட்சய திருதியை அன்று சிப்பி வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் என்பது மக்களின் நம்பிக்கை
சிப்பியை போலவே சங்கும் லக்ஷ்மிக்கு பிடித்த பொருளாக நம்பப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் மக்கள் சங்கு வாங்கி வீட்டி வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களையும் அட்சய திருதியை நாளில் வாங்கலாம்.
அட்சய திருதியை நாளில் பானைகளை வாங்குவதும் அதிர்ஷ்டம் சேர்க்கும் என்பது நம்பிக்கை.
அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என மங்கலகரமான பொருட்கள் எதுவேண்டுமானாலும் வாங்கலாம்.